crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

புஸல்லாவை காட்டுமாரி அம்மன் ஆலயத்தின் மகோற்சவ விழா

புஸல்லாவை – வகுபிட்டிய காட்டுமாரி அம்மன் ஆலயத்தின் 44ஆவது மகோற்சவ விழா இன்று 27 ஆம் திகதி வெள்ளிக் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது

மகோற்சவ பெருவிழா காலை 6 மணி முதல் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கிராம சாந்தி, பிரவேச பலி, நந்திக்கொடியேற்றம், முகூர்த்த கால், காப்பு கட்டுதல் என்பன இடம்பெறும். மாலை 6 மணிக்கு கரகஸ்தாபனம் இடம்பெறும்.

மகோற்சவ பெருவிழாவில் நாளை 28ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் அஷ்டோத்தர (108) சங்காபிஷேகம், பால்குட பவனி, பறவைகாவடி, தீமிதிப்பு என்பன இடம்பெற்று, மகேஷ்வர பூஜையுடன் அன்னதாபம் வழங்கப்படும். மாலை 6 மணிக்கு வேட்டை திருவிழா ஆரம்பமாகும்.

மகோற்சவ பெருவிழாவில் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் விசேட வசந்த மண்டப பூஜையுடன் விநாயகர், முருகன், சமேதரராக அம்பிகை தேரேறி திருவீதி வலம் வருதல் இடம்பெறும். மாலை 04 மணியளவில் பச்சை சாத்துதல், மாவிளக்கு பூஜை, மஞ்சள் நீர் ஆடுதல் என்பவற்றுடன் கொடியிறக்கும் நிகழ்வும், கரகம் குடிவிடலும் இடம்பெறும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 30 − 27 =

Back to top button
error: