இலங்கை முழுவதும் இன்று (16) இரவு 8.00 மணி முதல், நாளை (17) காலை 5.00 மணி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு .தற்போது திருத்தப்பட்டு இரவ 11.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு இணங்க, நாடளாவிய ரீதியில் இன்று (16) இரவு 11.00 மணி முதல், நாளை (17) அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை. என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது