இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்க்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுவரும் எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சனத் நிசாந்த, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டோரை உடன் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்ய சட்ட மா அதிபர் சி.ஐ.டி.க்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
நாலக விஜேசிங்க, மிலான் ஜயதிலக, பந்துல ஜயமான்ன , தினெத் கீதகே, சமன் லால் பெர்ணான்டோ, தேசபந்து தென்னகோன், அமல் சில்வா, சஜித் சவங்க, டேன் ப்ரியசாத், புஷ்பலால் குமாரசிங்க, சஞ்ஜீவ எதிரிமான்ன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சனத் நிசாந்த, நிசாந்த ஜயசிங்க, அமித்த அபேவிக்ரம, புஷ்ப லால் குமார, மஹிந்த கஹந்தகம, திலிப் பெர்ணான்டோ, மஹிந்த கஹந்தகம உள்ளிட்டோரும் கைது செய்ய வேண்டியவர்களின் பட்டியலில் உள்ளடங்குகின்றனர் என தெரிய வருகிறது.( எம்.எப்.எம்.பஸீர்)