பதவி விலகிய முன்னாள் பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை.
பிரதி சபாநாயகர் தெரிவிற்கான இரகசிய வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்றுவருகின்ற நிலையில் அவர்கள் சமூகமளிக்கவில்லை என அறிவிக்கப்பட்டது.
கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற பதற்றநிலையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை தளத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.