அத்தியாவசிய தேவைகளின்றி நாளைய (18) தினம் பெற்றோல் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நாளைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெற்றோல் விநியோகிக்கப்படும் என மேலும் அறிவித்துள்ளது.
நாளை மறுதினம் முதல் பெற்றோல் விநியோக நடவடிககைகள் வழமைபோன்று இடம்பெறும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது .