இலங்கை லிற்றோ எரிவாயு நிறுவனம் நாடு முழுவதும் இன்று (18) முதல் சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கைக்கு நேற்று 3,700 மெற்றிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் வந்தடைந்ததுடன், இன்றும் எரிவாயு கப்பலொன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக சமையல் எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்படுவதாக லிற்றோ நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நேற்றும் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.