கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் கடந்த 09 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக ஆகியோருக்கு மே 25 வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக ஆகியோர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (18) முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக ஆகியோர் நேற்று (17) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.