ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்திற்கு முரணாகவே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சு பதவிகளை பொறுப்பேற்காமல் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது எனவும் அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒழுக்கமான முறையில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் சபையில் ஒன்று கூடுவதற்கு முடியாத நிலைமை காணப்படுகிறது, பாராளுமன்றம் சிறந்ததா அல்லது மோசமானதா என்பது தொடர்பில் இதுவரை கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தான் உள்ளது.என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சர்வகட்சி அரசாங்கத்தின் 09 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நேற்று (20) கோட்டை ஜனாதிபதி மாளிகையில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்போது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.
புதிய அமைச்சர்கள் விபரங்கள் வருமாறு:-
01. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்.
02. கலாநிதி சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்.
03. கலாநிதி கெஹலிய ரம்புக்வெல – சுகாதார அமைச்சர்.
04. கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச – நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு சீர்திருத்த அமைச்சர்.
05. ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்.
06. ரமேஷ் பத்திரண – பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்.
07. மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்.
08. நளின் பெர்னாண்டோ – வணிகம், வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்.
09. டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்.