crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சியில் பரீட்சைக்கு செல்வோருக்கு விசேட எரிபொருள் விநியோகம்

இலங்கை முழுவதும் நாளை (23) திங்கள் ஆரம்பிக்கப்படவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு கடமையில் ஈடுப்படவுள்ளவர்களுக்கும் மற்றும் பரீட்சாத்தியின் பெற்றோருக்கும் விசேடமாக எரிபொருள் விநியோகம் இன்றும் மற்றும் நாளை திங்கள் கிழமையும் முன்னுரிமை அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

க/பொ/த சாதாரணதர பரீட்சைக்கான கடமைகளில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் பயன்படுத்தும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம், கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கம், கிளிநொச்சி.பூநகரி பலநோக்கு கூட்டுறவு சங்கம், பூநகரி, சாந்தரூபன் எரிபொருள் நிலையம், இயக்கச்சி, பளை, ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோகிப்பட்டு வருகிறது.

கடமைகளுக்கான எரிபொருளினை பெற்றுக்கொள்ள தங்களது.
சிபாரிசுடன் உத்தியோகத்தர்கள் பட்டியலை வாகன விபரத்துடன் உடனடியாக
அனுப்பி வைக்குமாறு கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு வலயக்கல்வி
பணிப்பாளர்களை மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டையினை பயன்படுத்தி
பெற்றோர்கள் தங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை பெற்றுக்கொள்ள முடியும்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 1 =

Back to top button
error: