இலங்கை கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையங்களுக்கச் செல்வதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்துச் சபையும் மற்றும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் தயாராகியுள்ளது.
நாட்டின் தற்போதைய போக்கவரத்து நெருக்கடி நிலையினைக் கருத்திற்கொண்டு நேரகாலத்தோடு பரீட்சை நிலையங்களுக்குச் செல்லுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பரீட்சார்த்திகளுக்குப் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் இடையூறு நிலவுமாயின் அது பற்றி முறையிடலாம். இதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 0112 784 208, 0112 784 537 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறிவிக் க முடியும்.
அத்துடன் துரித அழைப்பிலக்கமான 1911ற்கு அழைப்பை ஏற்படுத்தி முறையிடலாம். அல்லது மாகாண அல்லது வலய கல்விப் பணிபாளர்களுக்கும் அறிவிக்கலாம்.
இலங்கை கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை இன்று (23) இலங்கை முழுவதும் 3,844 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்