இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் அவர் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாடு செல்வதற்கான தடை ஜூலை 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் (23) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷண கெக்குணவெல முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
வழக்கு விசாரணைக்காக அஜித் நிவாட் கப்ரால் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருக்கவில்லை என்பதுடன் , அவர் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெனாண்டோ தனது கட்சிக்காரருக்கு அழைப்பாணை கிடைத்துள்ளதாகவும் அடுத்த வழக்குத் தவணையில் அவர் மன்றில் ஆஜராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.