புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
புத்தளத்தில் நேற்று முன்தினம் (22) மாலை நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கூறினார்.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், அந்த அரசுக்கு ஆதரவு வழங்குவதே எமது அரசியல் கொள்கை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.