தெல்லிப்பளையில் பிரதேச மட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.எஸ்.சிவசிறி அவர்களின் தலைமையில் “பிரதேச மட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம்” நேற்று முன்தினம் (23) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர் கருத்துத் தெரிவிக்கும் போது
“தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலமையினை சாதமாகப் பயன்படுத்தி சமூகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிக்கலாம் எனவே கிராம மட்டங்களில் இயங்கும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் இத் தருணத்தில் மிகவும் சிறப்பாக செயலாற்றி, சமூகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து உரிய கவனம் எடுத்து சமூகத்தை பாதுகாக்கும் பெறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள், தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.