மட்டக்களப்பில் நிர்மானிக்கப்பட்டுவரும் மாவட்ட செயலக வளாகத்தில் சிரமதானம்
மட்டக்களப்பில் புதிதாக திராய்மடு பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் சிரமதான பணி நேற்று (25) முன்னெடுக்கப்பட்டது
மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுரைக்கு அமைய மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் சகல திணைக்கள உத்தியோகத்தர்களும் இணைந்து சிரமதான பணியினை மேற்கொண்டு வளாகத்தினை டெங்கு நுளம்பு உற்பத்தியாகா வண்ணம் சிரமதானப் பணியினை முன்னெடுத்திருந்தனர்.
நாடு பூராகவும் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டமும் டெங்கு அபாய வலயமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளன
இந்த நிலையில் இருப்பிடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்கள் போன்றவற்றை தூய்மைப்படுத்தி டெங்கு நோயில் இருந்து பாதுகாப்பதன் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டம் தோறும் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக இச்சிரமதான பணிகள் நடைபெற்று வருகின்றன.
“டெங்கு நுளம்பில் இருந்து பாதுகாக்க நாமும் எம் இல்லங்களை தூய்மையாக்குவோம்” எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களையும் செயற்படுமாறு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனை தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.