crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

சிறாஜியா அரபுக்கல்லூரிக்கு ஜெனெரேட்டர் அன்பளிப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முள்ளிப்பொத்தானை சிறாஜியா அரபுக்கல்லூரிக்கு அல்-ஹிக்மதுல் உம்மா பௌண்டேஷனினால் 7kw தர ஜெனெரேட்டர் (23) அன்பளிப்புச் செய்யப்பட்டது.

அல்-ஹிக்மத்துல் உம்மா பௌண்டேஷனின் தலைவர் கஸ்ஸாலி முகம்மட் பாத்திஹ்னால் சிறாஜியா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எ.எம்.எம்.நஸீரிடம் குறித்த ஜெனரேட்டர் கையளிக்கப்பட்டது.

சுமார் 200 க்கு மேற்பட்ட கிதாப் மற்றும் ஹிப்ழ் ஆண் மாணவர்களைக் கொண்ட சிறாஜியா அரபுக்கல்லூரியில் மாணவர்கள் மின்வெட்டுக் காலங்களில் கற்றல் நடவடிக்கைகளின்போது மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக சமூகசேவையாளரும் அல்-ஹிக்மதுல் உம்மா பௌண்டேஷனின் தலைவருமான கஸ்ஸாலி முகம்மட் பாத்திஹ் இன் கவனத்திற்கு கொண்டுவந்ததிற்கிணங்க சிறாஜியா அரபுக்கல்லூரியின் வேண்டுகோளை துரிதமாக நிறைவேற்றி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 17 − 13 =

Back to top button
error: