தேசிய பாடசாலையாக தரம் உயர்தப்படும் கலகெதர ஜப்பார் மத்திய கல்லூரி
1903ம் ஆண்டு சிறியதொரு கல்வி கற்பிக்கும் கல்விக் கூடமாக ஆரம்பிக்கப்பட்டது
1000 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தும் கல்வி அமைச்சின் திட்டத்திற்கு அமைவாக சுமார் 119 வருட கால கற்றல் கற்பித்தல் சார் போற்றத் தகு வரலாற்றைக் கொண்ட கண்டி கலகெதர ஜப்பார் மத்திய கல்லூரியும் தேசிய பாடசாலை என்ற தரத்திற்கு தரம் உயர்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மத்திய மாகாணத்தின் மிகவும் பழமை வாய்ந்த தமிழ் மொழி மூல பாடசாலையாக நிறுவப்பட்ட குறித்த பாடசாலை கடந்த நூற்றாண்டில் பாரிய கல்விச் சேவையினை வழங்கி பல ஆளுமைகளை உருவாக்கியமை அதன் வளர்ச்சிப்பாதைக்கு சான்றாக அமைந்துள்ளது.
1903ம் ஆண்டு சிறியதொரு அமைப்பில் கல்வி கற்பிக்கும் சாதாரணமான ஒரு கல்விக் கூடமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கல்லூரி பிற்பாடு அதன் வளர்ச்சி மற்றும் சாதனைகள் காரணமாக படிப்படியாக ஜப்பார் வித்தியாலயம், ஜப்பார் மகா வித்தியாலயம், ஜப்பார் மத்திய கல்லூரி, நவோதயா பாடசாலை என மாற்றம் பெற்று இன்று தேசிய கல்லூரியாக பரிணமித்துள்ளமை போற்றத்தக்க விடயமாகும்.
தேசிய பாடசாலையாக மாற்றம் பெற்றுள்ள ஜப்பார் கல்லூரி எமது சமூகத்தின் மதிப்பிலா சொத்தாகும். பாடசாலைக்குத் தேவையான பௌதீக வளங்கள் யாவும் தாராளமாக காணப்படுகின்றன. தேசிய பாடசாலையாக மாற்றம் பெற்ற பின்னர் பாடசாலைக்கு மென்மேலும் பல வசதிகள் கிடைக்கப் பெறும். எனவே பாடசாலையின் வளர்ச்சியில் நாமும் பங்குதாரர்களாக மாற வேண்டும்.
கடந்த காலங்களில் பாடசாலையின் கல்வி மற்றும் வௌிக்கள நிகழ்ச்சிகளில் பாரிய வௌியீடுகளை பாடசாலை தந்துள்ள நிலையில் தேசிய பாடசாலையாக மாற்றம் பெற்றதன் பின்னர் அதன் வௌியீடுகள் இரட்டிப்பாகக்கூடும் என்பது எமது அவா.
எனவே இந்த கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில் தமது கால நேரங்களை , செல்வங்களை செலவிட்ட சகலருக்கும், முன்னால் அதிபர்கள் ஆசிரியர்கள், தற்போதைய அதிபர் மற்றும் ஆசியிரியர் குழாம், சிற்றூழியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் அனைவருக்கும் வல்ல இறைவன் தகுந்த கூலியினை வழங்க வேண்டும்.
அத்துடன் கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ், கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் ப்ரேம்ஜயந்த மற்றும் கலகெதர அபிவிருத்திக் குழுவின் துனைத் தலைவர் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியவர்களுக்கும் எமது நன்றிகள் உரித்தகட்டும்.
தகவல் – பழைய மாணவர் சங்கம்