
கொழும்பு – காலிமுகத்திடலில் ‘கோட்டகோகம’ போராட்ட இடம் நிறுவப்பட்டு 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இன்று (28) ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி, கொழும்பு உலக வர்த்தக மையம் மற்றும் அதனை அண்டிய பிரதிசங்களில் இடம்பெற்று வருகிறது.
ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியை செல்ல விடாமல் தடுப்பதற்காக கொழும்பு லோட்டஸ் வீதியில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியில் இன, மத, பாலின வேறுபாடின்றி நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த பெரும்திரளான மக்கள் பங்குகொண்டுள்ளதுடன் மும்மதங்களையும் சேர்ந்த மத தலைவர்ளும் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்