இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால், துமிந்த சில்வாவிற்கு வழங்கிய பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்காலத் உத்தரவு இன்று (31) பிறப்பித்துள்ளதுள்ளதுடன் அதற்கமைய, துமிந்த சில்வாவை மீண்டும் சிறையில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொது மன்னிப்பை அண்மையில் வழங்கி விடுதலை செய்திருந்தார்
ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது தாயார் சுமணா பிரேமச்சந்திர மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கஸ்ஸாலி ஹுஸைன் ஆகியோரினால் உயர் நீதிமன்றத்தில் மூன்று அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (31) பரிசீலனை செய்த நீதிமன்றம், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான உத்தரவையும் வழங்கியுள்ளது.