கண்டி – வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள கும்புக்கந்துறை அல்-ஹிக்மா மகாவித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த மௌலவி எம்.ஐ.நிலாம்தீன் (சர்க்கி) தனது 28 வருட கால ஆசிரியர் சேவையிலிருந்து (06.06.2021) ஓய்வு பெற்றார்.
இவர் மாத்தளை மாவட்டத்தில் உள்ள மடவல – உல்பத்த பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மடவல – உல்பத்த சிங்கள மகாவித்தியாலயம், ரஜமன முஸ்லிம் வித்தியாலயம், அட்டாளச்சேனை-கிழக்கிழங்கை அரபிக் கல்லூரி என்பவற்றில் பழைய மாணவராவார். இவர் 1986 ஆம் ஆண்டு கிழக்கிழங்கை அரபிக் கல்லூரி அல் ஆலிம் பரீட்சையில் சித்தியடைந்து சிறிது காலம் அங்கு விரிவுரையாளராகவும் கடைமையாற்றியுள்ளார்.
1993 ல் இவர் ஆசிரியர் நியமனம் பெற்று கும்புக்கந்துறை அல்-ஹிக்மா மகாவித்தியாலயத்திலும் பின்னர் தெல்தெனிய முஸ்லிம் வித்தியாலயத்திலும் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.
1993/95 காலப் பகுதியில் தேசிய கல்வி நிறுவகத்தின் தொலைக் கல்வி மூலமான அறபு – இஸ்லாம் பாடநெறியில் பயிற்றப்பட்ட ஆசிரியராக பேராதனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தனது பயிற்சியை பூரணப்படுத்தினார்.
தெல்தெனிய, அம்பகஹலந்த முஸ்லிம் மஸ்ஜித் மற்றும் கும்புக்கந்துறை மஸ்ஜிதுல் அக்பர் ஜும்மா பள்ளி என்பவற்றில் மேலதிக நேரங்களில் பேஷ் இமாமாகவும் நூராணியா குர்ஆன் மத்ரசா முஹல்லிமாகவும் சமூகப் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.