அட்டுலுகம பிரதேசத்தில் காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நாளை ஜூன் 01 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.
அட்டுலுகம கல்வீட்டுமண்டி அக்ரம் அவர்களின் 9 வயதான மகள் பாத்திமா ஆய்ஷா கடந்த 27 ஆம் திகதி காலை 10 மணியளவில் தனது வீட்டுக்கு அண்மையில் உள்ள கடைக்கு சென்று பொருள் கொள்வனவு செய்து விட்டு வீட்டுக்கு வரும் வழியில் காணாமல் போனார்
காணாமல் போன சிறுமி வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நில பிரதேசத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார், 9 வயதான ஆய்ஷா அட்டுலுகம அல் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் 4ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்தார்
சிறுமியின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை மற்றும் ஆரம்ப கட்ட போலீஸ் விசாரணைகளின் பின்னர் பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் சிறுமியின் உடல் நேற்று (30) மாலை அட்டுலுகமயில் அடக்கம் செய்யப்பட்டது