crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு நீதி கோரி மகஜர்

வன்முறைக்கும் வன்கொடுமைக்கும் உட்படுத்தப்படும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நீதி கோரி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன் நேற்று (31) வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.

அண்மையில் களுத்துறை மாவட்டத்தின் அட்டுளுகம பகுதியில் 09 வயது சிறுமிக்கு நேர்ந்த துன்பியல் சம்பவத்திற்கு நீதி கோரி குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை கையளித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 8 =

Back to top button
error: