crossorigin="anonymous">
உள்நாடுபொது

புதிய இராணுவ தளபதிக்கு அதிகார கோல் கைமாற்றம்

தற்போது பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள 23 வது இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பதவியிலிருந்து விலகும் நிகழ்வு நேற்று (31) பிற்பகல் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய கஜபா படையணியினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கலுடன் நடைபெற்றது.

அதனையடுத்து புதிய இராணுவ தளபதியாக பதவியேற்றுக்கொள்ளும் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு இராணுவ தளபதியின் அலுவலகத்தில் வைத்து அதிகார கோல் கைமாற்றம் செய்யப்பட்டது.

அதிகாரம் கைமாற்றம் செய்யப்படுவதை குறிக்கும் ஏழு தலைகள் கொண்ட சிங்கத்துடன் தங்க மற்றும் வெள்ளி நிறத்தில் வடிவமைக்கப்பட்ட வாளின் பிரதிரூபமான இது செரபெண்டியா (‘ serapendia ‘) என்று அழைக்கப்படும்.

இது கட்டளை அதிகாரத்தை குறிக்கிறது. அதன் மற்றைய பகுதிகள் இயற்கை சட்டங்கள், தொழில் மரியாதை மற்றும் கண்ணியம், தேசம், மதங்கள், கலாசாரம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன.

குறித்த சின்னத்துடனான அலங்கார கோல் இராணுவ தளபதியவர்களால் மாத்திரமே பிரயோகிக்க கூடிய அதிகாரங்களை குறிக்கின்றது. மேற்படி இரு அடையாளச் சின்னங்களும் இராணுவத் தளபதியின் அலுவலகத்தின் முக்கியத்துவத்தையும் நாட்டின் நலன்களுக்காக இராணுவத்திடம் வழங்கப்பட்டுள்ள ஆணையிடும் அதிகாரத்தையும் குறிக்கின்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + 3 =

Back to top button
error: