இலங்கை முஸ்லிம் சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ் யாத்திரைக்கு எவரையும் அனுப்புவதில்லை என தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை முஸ்லிம் சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் 1,585 பேர் இம்முறை ஹஜ் யாத்திரை செல்வதற்கு சவூதி அரேபியா அனுமதி அளித்திருந்தது. எனினும், டொலர் பற்றாக்குறை காரணமாக, இவ்வருடம் இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரைக்கு எவரையும் அனுப்புவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை முஸ்லிம் சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.
தற்போதைய சூழ்நிலையில் ஏற்படும் செலவுகள் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக யாத்திரியர்களை ஹஜ் கடமைக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக ஹஜ் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.