crossorigin="anonymous">
வெளிநாடு

அமெரிக்க மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு, 4 பேர் மரணம்

அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ள டுஸ்லா எனுமிடத்தில் மருத்துவமனையில் (புதன்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் பலியாகியுள்ளதுடன். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து டுஸ்லா பொலிஸ் துணை தலைவர் எரிக் டல்க்லேஷ் கூறுகையில்,

“இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தார்.

அந்த நபர் எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது தெரியவில்லை. அவரிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்றும் ரைஃபில் ரக துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் ஒவ்வொரு அறையில் வேறு ஏதும் சந்தேகத்துக்குரிய நபர்கள் இருக்கின்றனரா என்று தீவிர சோதனை நடத்தியுள்ளோம்” என்றார்.

கடந்த மாதம் டெக்சாஸ் நகரில் உள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் ஒன்றில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் 2 ஆசிரியைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 1

Back to top button
error: