மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கை
அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாடு பூராகவும் நேற்று (06) திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்திருந்தது.
கல்வி அமைச்சின் அறிவித்தலிற்கு அமைவாக முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் 5 கல்வி வலயங்களிலும் இன்றைய தினம் பாடசாலைகள் மீள திறக்கப்பட்டு கல்வி நடவடிக்கையினை மேற்கொள்ளும் பொருட்டு அதிபர்களும், ஆசிரியர்களும் கடமைக்கு சமூகமளித்திருந்தமையினை காணமுடிந்தது.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள புனித மிக்கேல் கல்லூரி, புனித சிசிலியா கல்லூரி மற்றும் வின்சன்ட் மகளீர் தேசிய பாடசாலை ஆகியவற்றிற்கு அதிகளவிலான மாணவர்கள் ஆர்வத்துடன் பாடசாலைக்கு வருகை தந்திருந்ததுடன்,
எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகின்ற போதிலும் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலையில் கொண்டுவந்து விடுவதையும், சில மாணவர்கள் பாடசாலை சேவை பஸ்களிலும், துவிச்சக்கர வண்டியிலும் பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர்.
கடந்த மாதம் 19 ஆம் திகதி முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தை நிறைவுறுத்தி பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.