இலங்கை லிட்ரோ எரிவாயு நிறுவனம் 12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய உள்நாட்டு திரவ எரிவாயு சிலிண்டர்கள் இன்று (08) விநியோகிக்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கியவுடன் சில நாட்களில் விநியோகம் மீண்டும் தொடங்கும் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது
அதேவேளை இலங்கையில் எதிர்வரும் மூன்று வாரங்கள் எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் விநியோகிப்பதில் சிரமமான காலகட்டமாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது