விளையாட்டு
தெஹியங்க ‘யங் பைட்டர்ஸ்’ விலையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது
(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)
கண்டி – யட்டிநுவர பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விளையாட்டுக கழகங்களுக்கு இடையில் இடம் பெற்ற உதைப்பந்தாட்டப் போட்டியில் தெஹியங்க ‘யங் பைட்டர்ஸ்’ விலையாட்டுக் கழகம் வெற்றியீட்டி செம்பியனானது
இப் போட்டிகள்தெஹியங்க அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று (07) இடம் பெற்றன.
இப் போட்டியில் ஆறு அணிகள் கலந்து கொண்டதுடன் இறுதிப் போட்டி தெஹியங்க யங் பைட்டர்ஸ்’ அனிக்கும், தந்துறை ‘லீகர் பவர்’ அனிக்கும் இடையில் இடம் பெற்றது.
இப்போட்டியில் 5-0 கோல் வித்தியாசத்தில் ‘யங் பைட்டர்ஸ்’ அணி வெற்றியீட்டியது.
யங் பைட்டர்ஸ்’ அணி அதன் பயிற்றிவிப்பாளர் எம்.ஆர் எம். ரியாஸ் இனது வழிகாட்டலில் மேற்படி வெற்றியை ஈட்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.