உள்நாடுபிராந்தியம்
புத்தளம் வீதிகளின் வரைபுத் திட்டம் ஆணையாளரிடம் கையளிப்பு
புத்தளம் நகரசபையினால் புத்தளம் நகரசபை எல்லைக்குட்பட்ட வீதிகளின் வரைபுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்கள் புத்தளம் வீதிகளின் வரைபுத் திட்டம் வடமேல் மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் ஆணையாளரிடம் நேற்று முன்தினம் (06) கையளித்தார்.
உள்ளூராட்சி மன்றங்கள் இவ்வரைபுத் திட்டத்தை தயாரிப்பதற்காக கட்டணம் செலுத்தி தனியார் நிறுவனங்களின் உதவியுடன் தயாரித்திருந்தபோதிலும் புத்தளம் நகரசபை உத்தியோகத்தர்களை மட்டுமே பயன்படுத்தி இவ்வரைபுத் திட்டத்தைத் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.