மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவை ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களினால் அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பு இன்று (08) வெளியிடப்பட்டுள்ளது
மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவை ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
1979 ஆம் ஆண்டு இலக்கம் 61 இன் கீழான அத்தியாவசிய பொது மக்கள் சேவை சட்டத்தின் ,இரண்டாவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களினால் அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பில் இன்று (08) மாலை இது தொடர்பாக அறிவித்துள்ளார்.
அரசாங்க கூட்டுத்தாபனம் , திணைக்களம் உள்ளூராட்சி மன்றம் அல்லது கூட்டுறவுச் சங்கங்களினால் நியோகிக்கப்படும் மின் விநியோகம் மற்றும் வைத்திய சாலை சேவை பொது மக்களின் வழமையான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு அத்தியாவசியம் என்பது இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்திய சாலை, பராமறிப்பு நிலையம் மருத்துவ நிலையம் மற்றும் ஏனைய பொதுவான நிறுவகங்களினால் நோயாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சிகிச்சை மற்றும் சேவைகள் வைத்தியசாலை சேவைகளுக்கு உட்பதாகும்
அதேவேளை இலங்கை பாராளுமன்றத்தில் நாளை (09) சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை மின்சக்தி திருத்தச் சட்டமூலம் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் இன்று (08) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது