crossorigin="anonymous">
உள்நாடுபொது

பசில் ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா?

இராஜினாமா கடிதத்தை இன்று அல்லது நாளை அனுப்பி வைப்பார்?

இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் சகோதரரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்‌ஷ தனது தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இன்றையதினம் (09) முற்பகல் 11 மணிக்கு விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ள பசில் ராஜபக்‌ஷ தனது தீர்மானத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்டுகிறது

அதன் பின்னர் பசில் ராஜபக்‌ஷ தனது இராஜினாமா கடிதத்தை இன்று (09) அல்லது நாளை (10) பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத்தை விட்டு வெளியேறியதன் பின்னர் கட்சி நடவடிக்கைகளில் முழுநேரமாக ஈடுபடுவதற்கு பசில் ராஜபக்‌ஷ தீர்மானித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் நிதியமைச்சராகவும் பதவியேற்றிருந்தார். நாட்டில் ஏற்பட்ட பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி மிக்க சூழலையடுத்து, நிதியமைச்சு பதவியிலிருந்து அண்மையில் அவர் விலகியிருந்தார்.

இந்நிலையிலேயே தற்போது அவர் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 37 − 33 =

Back to top button
error: