பாராளுமன்ற உறுப்பினர் பசில் ரோஹன ராஜபக்ஷ தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யும் கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவிடம் இன்று (09) கையளித்தார்.
இவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2021ஆம் ஆண்டு ஜூலை 08 ஆம் திகதி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இவர் சில மாதங்கள் நிதி அமைச்சராகப் பணியாற்றியிருந்தார்.
பசில் ரோஹன ராஜபக்ஷ அவர்கள் இதற்கு முன்னர் இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.