இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்கள் இன்றி பாராளுமன்றத்தில் இன்று (09) நிறைவேற்றப்பட்டது.
2009 ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தினைத் திருத்துவதற்கான இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்கள் இன்றி இன்று பாராளுமன்றத்தில் 120 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தின் பின்னர் எதிர்க்கட்சி வாக்கெடுப்பைக் கோரியதுடன், இதில் குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும்,
எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், 13 பேர் நடுநிலை வகித்தனர். இதற்கமைய 84 வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் 2022 மே மாதம் 17ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலத்தின் ஊடாக மின்சாரப் பிறப்பாகத்திற்கு விலைகோரும் நடைமுறையொன்றில் பங்குபற்றுவதற்கு எவரேனுமாளை அனுமதிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.