crossorigin="anonymous">
பொது

இந்திய EXIM வங்கியிடம் இலங்கை 55 மில்லியன் அ. டொலர் கடன்

இலங்கை அரசாங்கம் இந்திய EXIM வங்கியிடமிருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இன்று (10) கைச்சாத்திட்டுள்ளது.

கடன்  உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்றையதின் (10) இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை நிதியமைச்சின் செயலாளர் எம். சிறிவர்தன மற்றும் இந்திய EXIM வங்கியின் பொது முகாமையாளர் நிர்மித் நரேந்திர வெத் ஆகியோரிடையே இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சிறுபோக செய்கைக்காக 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்யும் பொருட்டு இந்திய அரசாங்கத்திடம் குறித்த கடன் உதவியை இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது.

இந்திய அரசு இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவில் இருந்து யூரியா உரம் கொள்முதல் செய்வதற்கு 55 மில்லியன் (5.5 கோடி) அமெரிக்க டொலர்கள் கடனை வழங்க  ஒப்புக்கொண்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 56 = 65

Back to top button
error: