பொது
லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் விஜித ஹேரத் இராஜினாமா
இலங்கை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து இன்று (10) இராஜினாமா செய்துள்ளார்
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் அவரது இராஜினாமாவுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த பொறியியலாளர் விஜித ஹேரத் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பல், கடந்த இரண்டு தினங்களாக தரித்து நிற்கும் நிலையில், அதற்கான டொலரை செலுத்த முடியாமல் போயுள்ளமையே, அவரது பதவி விலகலுக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.