crossorigin="anonymous">
பொது

‘பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம்’

கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படவில்லை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படவில்லை. இன்றும் பல்வேறு நாடுகளில் மீண்டும் வைரஸ் தாக்கத்திற்கு மக்கள் முகங்கொடுத்து வருகின்றமையினால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும் அத்துடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதும் அவசியம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ள காரணத்தினால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையுடன் தாம் உடன்படமாட்டோம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தலைவர் உபுல் ரோஹன தெரிவிக்கையில்

“கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படவில்லை. இன்றும் பல்வேறு நாடுகளில் மீண்டும் வைரஸ் தாக்கத்திற்கு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் கொரோனா பேரிடரை ஒழிக்காமல், இதுபோன்ற தீர்மானங்களை கட்டாயமாக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.

ஆகவே பொதுமக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும் அத்துடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 42 − = 38

Back to top button
error: