crossorigin="anonymous">
பொது

இலங்கை மற்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்,  சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணன் அவர்களை சிங்கப்பூரில் சந்தித்து பல முக்கிய விடயங்களை கலந்துரையாடியுள்ளார்

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில், இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கடந்த 8 – 9ஆம் திகதிகளில் சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் விளக்கமளித்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், இலங்கைக்கான நிதியுதவியைப் பெறுவதற்கும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கும், சிங்கப்பூருக்கான இலங்கை ஏற்றுமதிகளுக்கான வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் உதவி கோரினார்.

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆதரவையும் அமைச்சர் பீரிஸ் கோரினார்

இலங்கை வெளிநாட்டமைச்சர் ஒருவர் நான்கு வருடங்களின் பின்னர் சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயமாக மேற்கொள்வது இதுவே முதலதடவையாகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 3

Back to top button
error: