பொது
இலங்கை இராணுவத் தளபதி – இலங்கை பொலிஸ் மா அதிபர் சந்திப்பு
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே நேற்று (10) இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவை சந்தித்தார்
இலங்கையின் 24 ஆவது இராணுவத் தளபதியாக அண்மையில் கடமைகளைப் பொறுப்பேற்ற இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே நேற்று இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவைச் சந்தித்தார்.
இராணுவத் தளபதியாக கடமைகளை ஆரம்பித்ததையடுத்து சம்பிரதாயமாக இந்த சந்திப்பு இடம்பெற்றது.
பொலிஸ் தலைமையகத்திற்கு வருகை தந்த லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவை பொலிஸ் தலைமையக பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த டி சில்வா வரவேற்றதுடன் பொலிஸ் மரபுகளுக்கமைய கௌரவ மரியாதையுடன் அவரை வரவேற்றார்.