எரிபொருள் கையிருப்பை அறிய ‘fuel.gov.lk’ இணையத்தளம்
நுகர்வோர் தமக்கு அருகிலுள்ள எரிபொருள் நிலையங்களின் எரிபொருள் கையிருப்பை அறிந்துகொள்வதற்கு வசதியாக fuel.gov.lk எனும் இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையம் ஆகியன இணைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களை பொதுமக்கள் இலகுவாக அணுகும் இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
எரிபொருள் நிலையங்கள் வழங்கும் தகவல்களுக்கு ஏற்ப இணையத்தளம் புதுப்பிக்கப்படுவதால் பொதுமக்கள் துல்லியமான தகவல்களைப் பெற முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய தகவலின் அடிப்படையில், எரிபொருள் இருப்பு மற்றும் ஏனைய தொடர்புடைய தகவல்கள் தினமும் காலை 9 மணிக்கு எரிபொருள் தகவல் முகாமைத்துவ அமைப்பில் பதிவேற்றப்படுவதுடன், அதன் பின்னர் ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒருமுறை தகவல் புதுப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.