பொது
வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் ஜூலை 12 வரை
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இவ்வாண்டுக்கான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் நாளை 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு ஜூலை 12 ஆம் திகதி வரை பட்டியல்கள் காட்சிப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் மற்றும் வாக்காளர் பட்டியலுக்கு சேர்க்கப்படும் பெயர் பட்டியல் ஜூலை 12 ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்படும்.
இந்த காலப்பகுதியில் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.