பிராந்தியம்
ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வு
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் இயங்கி வரும் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக கிரிக்கெட் அணிக்கான புதிய சீருடை அறிமுக நிகழ்வு நேற்று முன்தினம் (12) இடம்பெற்றது.
ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் யூ.எல்.அஹமட் லெப்பை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கழகத்திற்கு புதிய சீருடைகளை அன்பளிப்பு செய்த கழகத்தின் பொருளாளரும் ஏ.எப்.எச்.ஐஸ்வாடி உரிமையாளருமான எம்.எம்.புகாரிக்கு கழக நிர்வாகத்தினர் இதன்போது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.