‘இலங்கை நெருக்கடி தாமே ஏற்படுத்திக் கொண்டது’ – பிரதமர்
இலங்கை இந்த நெருக்கடியை தாமே ஏற்படுத்திக் கொண்டதாக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அசோசியேட்டஸ் பிரஸ் – உடன் இடம்பெற்ற நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கையில்
“மத்திய கிழக்கு நாடுகளிலிருந்துஎரிபொருள் நிலக்கரியைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை முயற்சித்து வருகின்றது.
பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டத்தை அடையாளம் கண்டு அத்திட்டத்திற்கு சீனா அல்லது ஏனையநாடுகளிடம் கடனை பெற்றுக் கொள்வது கட்டாயமாகும்.
சீன-கடன் கட்டமைப்பு தொடர்பில் சீனாவுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
ரஷ்யா அரசாங்கம் இலங்கைக்கு கோதுமையை வழங்குகின்றது என்றும் கோதுமையுடன் எரிபொருளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆற்றல் கூடுதலாக இருக்கிறது
இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாக எதிர்காலத்தில் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு பெரும்பாலும் வாய்ப்பு இருக்கிறது
கொவிட் தொற்றின்போது அதற்கமைவாக இடம்பெற்ற தவறான முகாமைத்துவம், வரி குறைப்பு, சில முரணான கொள்கை ரீதியான தீர்மானம் என்பன இந்த நெருக்கடிக்கு காரணமாகும். யுக்ரேன் யுத்தத்துடன் இந்த நிலை மோசடைந்தது” என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.