(ஜவாஹிர் எம் ஹாபிஸ் )
எட்டாவது சர்வதேச யோகா தினத்தை கண்டிலும் கொண்டாடுவதற்கு, கண்டி உதவி இந்தியத் தூதுவராலயம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது விடயமாக கண்டி பல்லேகலையில் கடந்த 14 ஆம் திகதி இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கண்டி உதவி இந்தியத் தூதுவர் டாக்டர் எஸ். ஆத்திரா மற்றும் மத்திய மாகாண பிரதான செயலாளர் உற்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அதில் பின்வரும் விடயங்கள் பற்றித் தெரிவிக்கப்பட்டது.
இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி சுகதேகியாக வாழ்வதற்கு யோகாசணம் முக்கிய காரணியாக இருப்பதால் அதனை பிரபல்யப்படுத்தும் வகையில் உலகலாவிய ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன்படியே சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவோகவும் இந்திய உதவித்தூதுவர் தெரிவத்தார்.
அதன் அடிப்படையில் எட்டாவது சர்வதேச யோகா தினம் இன்று 21ம் திகதி கண்டி அஸ்கிரிய மைதானத்திலும் கொண்டாடப்பட உள்ளது.
சர்வதேச யோகா தினம் காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்படுவதுடன் பாடசாலை மாணவர்கள் 200 பேரும் அரச உத்தியோகத்தர்கள் 100 பேரும் கலந்து கொள்ள உள்ளனர்.
சர்வதேச யோகா தினம் கடந்த 7 வருடங்களாக கண்டியில் இது தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருவமதகவும் அவர் மேலும் தெரிவித்தார்.