எம்.சீ.சீ. பெர்டினாண்டோ தொடர்பில் அடுத்தவாரம் தீர்மானம்
சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து பின்னர் அதனை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்த இலங்கை மின்சாரசபை முன்னாள் தலைவர் எம்.சீ.சீ. பெர்டினாண்டோ தொடர்பில் அடுத்தவாரம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது
இலங்கை பாராளுமன்ற கோப்குழுவில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து பின்னர் அதனை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்த இலங்கை மின்சாரசபை முன்னாள் தலைவர் எம்.சீ.சீ. பெர்டினாண்டோ தொடர்பாக கோப்குழு அடுத்தவாரம் தீர்மானம் எடுக்கும் என கோப்குழுவின் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.
மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்தை அதானி நிறுவனத்துக்கு கையளிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அழுத்தம் பிரயோகித்ததாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தன்னிடம் கூறினார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை இலங்கை மின்சாரசபையின் முன்னாள் தலைவர் எம்.சி.சி. பெர்டினாண்டோ கோப்குழுவில் தெரிவித்திருந்தார்.