பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபை கல்விக் குழு அங்குரார்ப்பணம்

(நதீர் சரீப்தீன்)
இரத்தினபுரி – பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபை கல்வி அபிவிருத்தி குழு ஒன்றினை அண்மையில் (13) அங்குரார்ப்பணம் செய்து வைத்தது.
பலாங்கொடை பள்ளிகள் பரிபாலனயின் புதிய தலைவர் அல்ஹாஜ் எ.எல்.நஜீம் அவர்களின் தலைமையில் பலாங்கொடை பெரிய பள்ளிவாசலில் கல்வி அபிவிருத்தி குழுவுக்கான கூட்டம் நடைபெற்றது.
கல்வி அபிவிருத்தி குழுவின் தலைவராக பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபையின் செயலாளர் அல்ஹாஜ் என்.எம்.நளீம் செயல்படுவதுடன் இணைப்பாளராக ஜெய்லானி மத்திய கல்லூரி ஆசிரியர் எம்.ஜி.எஸ்.அஹமட் செயற்படுவார்.
கல்வி அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்களாக பாடசாலை அதிபர்கள். ஆசிரியர்கள்.கல்வி மான்கள் ஆகியோர் செயற்படுவார்கள்.
இன்றைய கூட்டத்தில் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் நூர்தீன் ரிபைதீன் கல்வி அபிவிருத்தி குழுவின் நோக்கம் பற்றி எடுத்துக் கூறினார்.
கல்வி அபிவிருத்தி குழு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
கல்வி அபிவிருத்தி குழு மாதம் ஒருமுறை கூடுவதென்றும். ஒவ்வொரு குழுவும் முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.