பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக குழு தேர்வும்
(நதீர் சரீப்தீன்)
இரத்தினபுரி மாவட்டத்தின் பலாக்கொட்டை சீ.சீ.தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும். புதிய நிர்வாக குழு தேர்வும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக வித்தியாலய அதிபர் பி. தம்பிராஜா தெரிவித்தார்.
இன்றைய காலகட்டத்தில் முறையான பழைய மாணவர் சங்கம் ஒன்று உருவாக்கப்படுவது கட்டாயத் தேவையாக உள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு எமது சீ.சீ.தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் அர்த்த புஸ்டியுள்ளதாக உருவாக்கப்பட உள்ளது.
பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் நாளை 18 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வித்தியாலய பிரதான மண்டபத்தில் ஆரம்பமாக உள்ளதுடன் பழைய மாணவர்களை பங்கு கொள்ள வருகை தருமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்
பொதுக் கூட்டத்தில் புதிய நிர்வாக குழு தேர்வும் இடம் பெறுவதால் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பாடசாலைக்கு பங்களிப்பு செய்யுமாறும் அதிபரவர்கள் வேண்டிக் கொண்டார்.