இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம், வன்முறை, தீவைப்பு, ஒருவர் உயிரிழப்பு
இந்தியா முழுவதும் ‘‘அக்னி பாதை’’ திட்டத்திற்கு பாரிய எதிர்ப்பு
இந்தியா மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு படை பணிக்கு சேர்த்துக் கொள்ளும் ‘‘அக்னி பாதை’’ திட்டத்திற்கு இந்தியா முழுவதும் பாரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது
அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 3-வது நாளாகவும் போராட்டம் நீடித்து இந்தியா முழுவதும் பாரிய எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று தீவைத்துள்ளதுடன் இதன்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் இந்தியா முழுவதும் சுமார் 300 ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
அத்துடன் ஆங்காங்கே பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
இந்தியா மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்துக்கு இந்தியா முழுவதும் பாரிய எதிர்ப்பு வலுத்து வருகின்றது.
It can never be a wise step to recruit someone at the age of 17 and retire them by 21. What will they do afterwards, act as a foot soldier for the hindutva hate campaings? Something is fishy in the #Agnipath #Agniveer scheme.
A burnt train at Secundarabad Railway Station. pic.twitter.com/OOChfn8DOc— Aasif Mujtaba (@MujtabaAasif) June 17, 2022
#Agnipath Protests | Protestors vandalize buses on the Yamuna Expressway near Uttar Pradesh's Tappal. pic.twitter.com/sJEENzDFSj
— NDTV (@ndtv) June 17, 2022