பொது
எரிபொருளுக்காக காத்திருக்கும் வாகன சாரதிகளுக்கு உணவு
(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் கண்டி மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக போதியளவு வாகனங்களுக்கானபெற்றோல் மற்றும் டீசல் உற்பட எரிபொருற்கள் கிடைக்காத காரணத்தால் இரண்டு மூன்று தினங்களாக வாகன சாரதிகள் எரிபொருளுக்காக காத்து நிற்க வேண்டி வந்துள்ளது
இதன் காரணமாக பசியுடன் காத்து நிற்கும் வாகன சாரதிகளுக்கு அயலவர்கள் உணவு சமைத்து பரிமாறினர்.
அவ்வாறு மடவளை சிரிமல்வத்தை வீதியில் காத்து நின்றவர்களுக்கு பாற்சோறு சமைத்து வழங்கபட்டது.