crossorigin="anonymous">
பொது

பங்கீட்டு அட்டை முறைமையில் எரிபொருள் விநியோகம்

எரிபொருளுக்கான தற்போதைய தட்டுப்பாட்டு நிலைமை காரணமாக யாழ்ப்பாண மாவட்ட த்தில் பங்கீட்டு அடிப்படையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்க எரிபொருள் பங்கீட்டு அட்டை முறைமையை பிரதேச செயலகங்கள் மூலமாக வழங்க மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் நடவடிக்கை (19) மேற்கொண்டுள்ளார்.

பொதுமக்கள் தத்தமது தேவைக்குரிய எரிபொருள் பங்கீட்டு அட்டைகளை வதிவிடத்திற்குரிய பிரதேச செயலகங்கள் மூலமாகவும், அத்தியாவசிய உத்தியோகத்தர்கள்/ அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது எரிபொருள் பங்கீட்டு விநியோக அட்டையை கடமையாற்றும் திணைக்கள தலைவரின் சிபார்சுடன் குறித்த உத்தியோகத்தர் வசிக்கும் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

வாகனங்களின் வகைப்படுத்தலின் அடிப்படையில் பிரதேச செயலாளர்களினால் எரிபொருள் நிலையத்தினை குறிப்பிட்டு எரிபொருள் பங்கீட்டு அட்டைகள் Motor Cycle, Three wheeler, Car,Dual purpose vehicle, Heavy vehicle, Hand tractor, Tractor, Special purpose vehicle என்ற வகைப்படுத்தலின் அடிப்படையில் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட நடைமுறைகளுக்கமைய எரிபொருள் அட்டைகளை காலதாமதமின்றி விநியோகிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 3 =

Back to top button
error: