பொது
அரச ஊழியர்கள் 2 வாரம் வீட்டிலிருந்து வேலை
இலங்கை அரச ஊழியர்களுக்கும் கல்வி துறையினருக்கும் இரண்டு வார காலம் வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளததுடன் இன்று (20) திங்கட்கிழமை முதல் இந்த திட்டம் அமுலுக்கு வருகின்றது.
பிரதான நகரங்கள் அல்லாத பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் உகந்த தீர்மானத்தை எடுக்க, மேல் மாகாணம் உள்ளிட்ட அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் அதிகாரம் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை அரச ஊழியர்களைப் பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையிலான சுற்றறிக்கை அண்மையில் (17) வெளியிடப்பட்டுள்ளது
இதன்படி இன்று திங்கட்கிழமையிலிருந்து இரண்டு வாரங்களுக்கு இது அமுல்படுத்தப்படவுள்ளது
வெளியிடப்பட்ட சுற்றறிக்கை