எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் – அமைச்சர்
இன்று ஜூன் 20 முதல் 22 வரை எதிர்வரும் 3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, 23 ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என்றும் தெரிவித்தார்.
அமைச்சில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்
எரிபொருளுக்காக நாட்டில் காணப்படும் நீண்ட வரிசைகள் தொடர்பில் தாம் கவலை கொள்வதாகவும் இதற்காக பொதுமக்களிடம் தாம் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் போதியளவு டீசல் கையிருப்பில் இருப்பதால் அதற்கு தட்டுப்பாடு ஏற்படாது என்ற போதும் டீசலை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.